சுடச்சுட

  

  மீன்பிடிக்கும் தொலைவை அதிகப்படுத்த விசைப்படகு உரிமையாளர்கள் கோரிக்கை

  By DN  |   Published on : 24th October 2014 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி கடலில் விசைப்படகு மூலம் மீன்பிடிக்கும் தொலைவை அதிகப்படுத்த மகிழ்ச்சி மாதா விசைப்படகு உரிமையாளர்கள் நலச் சங்கம் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

  இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ஜே.செல்வம், துணைத் தலைவர் எஸ்.பாஸ்கர், செயலர் எஸ்.ஜேசுதாஸ், துணைச் செயலர் ஏ.மரியஜான்,பொருளாளர்

  எஸ்.உபால்டுராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 275-க்கும்

  அதிகமான விசைப்படகுகள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. இத்துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறைப்படுத்தும்

  சட்டம் 1983-ன் படி அரசு நிர்ணயத்துள்ள அளவுகளில் மீன்பிடித்து வருகிறோம்.

  கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின் கடலில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றங்கள் காரணமாக 15 முதல் 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் கிடைத்து வந்த மீன்கள்

  இப்போது 25 முதல் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் கிடைப்பதால் விசைப்படகுகளில் அதிக குதிரை சக்தி கொண்ட இயந்திரங்கள் பொருத்த வேண்டிய நிலை

  ஏற்பட்டுள்ளது.

  எனவே மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வு செய்து மீன்பிடிக்கும் தொலைவை அதிகப்படுத்த அனுமதிக்கவும், விசைப்படகு மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய மானியங்கள்

  மற்றும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai