சுடச்சுட

  

  தீபாவளிப் பண்டிகை முடிந்து வெளியூர் செல்வதற்காக நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகள் குவிந்தனர்.

  தீபாவளிப் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை மாலை முதல் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த பயணிகள் மீண்டும்

  வெளியூர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் புதன்கிழமை மாலை முதல் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பயணிகளின் வசதிக்காக

  அரசுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

  எனினும் அக்டோபர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கலாம் என்பதால் போக்குவரத்துக் கழகம் அந்த நாள்களில் கூடுதலாக பேருந்துகளை

  இயக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  இதுபோல் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலும் சென்னை செல்லும் ரயில்களில் செல்வதற்காக பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளின் பாதுகாப்புக்காக

  ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai