சுடச்சுட

    

    வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: அதிமுக நிர்வாகி கைது

    By DN  |   Published on : 24th October 2014 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணல் கடத்தலை தடுத்தது தொடர்பான முன்விரோதத்தில் பெண் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.

    விளவங்கோடு வட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டிபாய். இவர், சில நாள்களுக்கு முன் மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது

    அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டாரஸ் லாரியிலிருந்து ஆற்றுமணலை மினிலாரிக்கு மாற்றும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனராம்.

    இதையடுத்து வட்டாட்சியர் ஆவணங்களை சோதனை செய்ததில், உரிய அனுமதியின்றி வாகனத்தில் ஆற்றுமணல் ஏற்றிச் செல்ல முயன்றது தெரியவந்தது.

    பின்னர் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் டாரஸ் லாரி மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்து, பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக திக்குறிச்சி அருகேயுள்ள ஞாறான்விளை பகுதியைச் சேர்ந்த, அதிமுக மேற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் சங்கச் செயலர் தேவதாஸ் (43) என்பவர்

    வட்டாட்சியர் மீது கோபத்தில் இருந்தாராம்.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த தேவதாஸ், அங்கு நிறுத்தியிருந்த வட்டாட்சியரின் வாகனத்தின் முன் தனது

    வாகனத்தை நிறுத்திவிட்டு தகராறில் ஈடுபட்டதுடன் வட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டிபாய்க்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இதுகுறித்து விளவங்கோடு சிறப்பு துணை வட்டாட்சியர் புரந்தரதாஸ் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் அன்புபிரகாஷ்

    வழக்குப் பதிந்து, தேவதாûஸ கைது செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai