சுடச்சுட

  

  குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி விழா தொடங்கியது.

  இதையொட்டி, ஏராளமான முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். நாகர்கோவில் நாகராஜா கோயில் ஸ்ரீ பாலமுருகன் கோயில், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி

  கோயில், தோவாளை முருகன் கோயில், கன்னியாகுமரி வேல்முருகன் குன்றம், வேளிமலை முருகன் கோயில், தக்கலை குமாரகோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு

  வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

  விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, ஆன்மிக உரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். 7 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்.

  29ஆம் தேதி சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரமும், 30ஆம் தேதி திருக்கல்யாணமும்,  விருந்தும் நடைபெறும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai