சுடச்சுட

    

    கன்னியாகுமரி அருகே வெள்ளிக்கிழமை புதருக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்ற வன ஊழியரை பாம்பு கடித்தது.

    குமரி மாவட்டம், பூதப்பாண்டி வனச்சரகத்தில் வன ஊழியராகப் பணிபுரிந்து வருபவர் சுந்தரதாஸ். பாம்புகளை லாவகமாக பிடிப்பதில் வல்லவரான இவர், கன்னியாகுமரி

    சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் ஏராளமான கொடிய விஷம் கொண்ட பாம்புகளை பிடித்துள்ளார்.

    இந்நிலையில், கன்னியாகுமரியை அடுத்த மந்தாரம்புதூர் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் மலைப்பாம்பு பதுங்கிருப்பதாக பொதுமக்கள் அவருக்குத் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து, விரைந்து வந்த சுந்தரதாஸ் புதருக்குள் கையை விட்டு பாம்பை பிடிக்க முயன்றார். அப்போது பாம்பு அவரின் கையில் கடித்ததில் காயம் ஏற்பட்டது. கையில்

    இருந்து ரத்தம் சொட்டிய நிலையில், 9 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார். பின்னர் காயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் கொட்டாரம் அரசு மருத்துவமனையில்

    அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai