சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் தொடர் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    By DN  |   Published on : 25th October 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக திருவட்டாறில் 53 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    பதிவான மழை விவரம்: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், பேச்சிப்பாறையில் 23 மி.மீ., பெருஞ்சாணியில் 1 மி.மீ., சிற்றாறு 1- 5.2

    மி.மீ., சிற்றாறு 2- 4.8 மி.மீ., மாம்பழத்துறையாறு 3 மி.மீ., நாகர்கோவில் 39.8 மி.மீ., பூதப்பாண்டி 8.5 மி.மீ., சுருளோடு 3 மி.மீ., கன்னிமார் 16.5., ஆரல்வாய்மொழி 4.2.,

    பாலமோர் 17.2., மயிலாடி 3.2., கொட்டாரம் 23., இரணியல் 5.2., ஆனைக்கிடங்கு 3 மி.மீ., குருந்தன்கோடு 2.6., அடையாமடை 23 மி.மீ., முள்ளங்கினா விளை 11 மி.மீ., புத்தன்

    அணை 1.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 708 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 431 கனஅடி தண்ணீரும், சிற்றாறு 1 அணைக்கு 234 கனஅடி

    தண்ணீரும், சிற்றாறு 2 அணைக்கு 40 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு 1 அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai