சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் பருவமழை நீடிப்பு நடவுப் பணியில் விவசாயிகள் தீவிரம்

    By DN  |   Published on : 25th October 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ அறுவடை முடிந்துள்ள நிலையில், கும்பப்பூ சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பருவமழை பெய்து வருவதால் அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள

    விவசாயிகள் நிகழாண்டு கும்பப்பூ சாகுபடி சிறப்பாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    நாஞ்சில் நாடு, புத்தனாறு கால்வாயில் அதிகமான தண்ணீர் வருவதால், கன்னியாகுமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன.

    இதையடுத்து மயிலாடி, அச்சன்குளம், பஞ்சலிங்கபுரம், சுசீந்திரம், தேரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai