சுடச்சுட

    

    சுசீந்திரம் பாசனக் குளத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்

    By DN  |   Published on : 25th October 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுசீந்திரம் பாசனக் குளத்தில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. இதை சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்லும் வகையில்

    தடைபட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை மீண்டும் தொடர வேண்டுமென பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

     சுசீந்திரம் தேரூர் பகுதியில் 55 வகை பறவை இனங்கள் மற்றும் 95 வகையான நீரைச் சார்ந்து வாழும் பறவைகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியை

    தமிழகத்தின் 2 ஆவது பறவைகள் பாதுகாப்புப் பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே இப் பகுதியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள சுசீந்திரம்

    பாசனக் குளத்திலும் ஏராளமான பறவைகள் முகாமிட்டுள்ளன.

     இக் குளத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த மரங்களில் நாரை, கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, பூநாரை உள்ளிட்ட பறவை இனங்கள் வந்து

    குவிந்துள்ளன. இப்பறவைகள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதங்களில் இனப்பெருக்கம் செய்வதற்காக இங்கு வந்து செல்வதாக பறவை

    ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நீர் வறண்ட காலநிலை ஏற்படும்போது இங்கிருந்து அவை திரும்பிச் சென்று விடுகின்றன.

     இதனிடையே இக்குளத்திற்கு வந்து செல்லும் பறவைகளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்த்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    என பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதையடுத்து ரூ. 5 லட்சம் செலவில் 3 காட்சிக் கோபுரம் மற்றும் டெலஸ்கோப் வசதி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட

    இத்திட்டத்தின் படி காட்சிக் கோபுரம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஆனால், டெலஸ்கோப் வசதி இதுவரையிலும் செய்யப்படவில்லை. இது பறவைகள்

    ஆர்வலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

     இது குறித்து சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த ஏ.நாகராஜன் கூறியதாவது: நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் முக்கிய சாலைப் பகுதியில் இந்தக் குளம்

    பரப்பளவில் மிகவும் பெரியதாக அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். இந்தக் குளத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உல்லாசப்

    படகு சேவை ஆரம்பிக்கப்பட்டது. சரியான திட்டமிடுதல் இன்றி ஆரம்பிக்கப்பட்டதால் படகு சேவை ஆரம்ப கட்டத்தோடு நின்று போனது.

     இந்நிலையில் இக்குளத்தின் நடுவே அமைந்துள்ள அடர்ந்த மரங்களில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்

    பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன. இயற்கை எழில் கொஞ்சும் இதனை சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்ல வசதியாக குளத்தின் கரைப் பகுதியில் காட்சிக் கோபுரம்

    மற்றும் டெலஸ்கோப் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ இப்பணி பாதியில் தடைபட்டுள்ளது.

     எனவே, வனத் துறையினர் இதில் தனிக்கவனம் செலுத்தி குளத்தின் நடுவே மண் குவியல் மேடை அமைத்து அவற்றில் மரங்களை நட்டு இங்கு வரும் பறவைகள்

    இங்கேயே நிரந்தரமாக தங்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

    பறவைகள் பாதுகாப்புக்காக குளத்தைச் சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து பாதியில் நின்று போன காட்சிக் கோபுரம் மற்றும் டெலஸ்கோப் வசதியை மீண்டும் ஆரம்பிக்க

    வேண்டும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai