சுடச்சுட

    

    கருங்கல், அக். 24: கருங்கல் அருகே உள்ள பாலூர் பகுதியில் வியாழக்கிழமை செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 2 டெம்போக்களை கருங்கல் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    பாலூர் பகுதியிலிருந்து அனுமதியின்றி, செம்மண் கடத்தப்படுவதாக கருங்கல் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கருங்கல் காவல் ஆய்வாளர்

    ரமேஷ்கண்ணன் தலைமையில் போலீஸார் பாலூர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 2 டெம்போக்களை போலீஸார்

    நிறுத்தியபோது, அதன் ஒட்டுநர்கள் தப்பிச் சென்றனர். டெம்போக்களைச் சோதனை செய்தபோது, அனுமதியின்றி செம்மண் கடத்தியது தெரியவந்தது.இதையடுத்து, 2

    டெம்போக்களையும் போலீஸார் பறிமுதல் செய்து, காவல்நிலையம் கொண்டு சென்றனர். மேலும் தப்பிச் சென்ற ஒட்டுநர்களை தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai