சுடச்சுட

    

    "தனித்திறமைகளை ஒருங்கிணைத்தால் மாணவர்கள் சாதனையாளர்களாகலாம்'

    By DN  |   Published on : 25th October 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்கள் தங்களிடம் இருக்கும் தனித் திறமைகளை ஒருங்கிணைக்கும் போது சாதனையாளர்களாக மாறலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் பேசினார்.

    ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்மண்டல பள்ளிகள் அளவிலான அறிவியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்து அவர்

    பேசியதாவது:

    பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்தும் வகையிலும்,  அறிவியல் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் கண்காட்சிகள்

    நடத்தப்படுகின்றன. இதன்மூலம், பள்ளிப் பருவத்தில் பல அறிவியல் கண்டுபிடிப்பாளர்களை நாம் உருவாக்கவும், இனம் காணவும் முடியும். மாணவர்கள் தங்களிடமிருக்கும்

    தனித் திறமைகளை ஒருங்கிணைக்கும் போது சாதனையாளர்களாக மாறமுடியும். ஒரு நாட்டின் முன்னேற்றம், அறிவியல் முன்னேற்றத்தோடு தொடர்புடையது. அறிவியல்

    வளர்ச்சி பசி, பட்டினியற்ற, உலகை உருவாக்கும். எனவே மாணவர்கள் தங்களின் அறிவியல் அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை

    உருவாக்கவேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் ஜி. ரசல்ராஜ் தலைமை வகித்தார். முதல்வர் ஒய். சுஜர், இயக்குநர் ஹரிஹரசுப்பிரமணி, குழித்துறை மாவட்ட கல்வி அலுவலர் ஜே.

    ஜேசுரத்தினம், தக்கலை மாவட்ட கல்வி அலுவலர் டி. ஜேக்கப் அருள் மாணிக்கராஜ், கல்லூரி அலுவலக நிர்வாகி அலெக்சாண்டர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக

    துணை முதல்வர் வி. சுந்தர்ராஜ் வரவேற்றார். துணை இயக்குனர் சாபுகுமார் நன்றி கூறினார். கண்காட்சியில், மகேந்திரகிரி இஸ்ரோ, காரக்கோணம் சிஎஸ்ஐ மருத்துவக்

    கல்லூரி  உள்ளிட்டவைக 80 பள்ளிகளின் அறிவியல் கண்காட்சிகள் இடம் பெற்றன. மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் இக்கண்காட்சியைப்

    பார்வையிட்டனர்.

    ஏற்பாடுகளை தொழில்நுட்பத் துறை பேராசிரியர் பிரிஜ்லால் ரூபன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்தனர். இக்கண்காட்சி இரண்டாவது நாளாக

    சனிக்கிழமையும் நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai