சுடச்சுட

  

  தேவையான விதைநெல் கையிருப்பு உள்ளது: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்

  By DN  |   Published on : 25th October 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்ட அரசு கொள்முதல் மையங்களில் தேவையான நெல் விதைகள் கையிருப்பு உள்ளதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

  குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

  இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, நெய்யாறு சானலில் தேவையான தண்ணீர்

  வரவில்லை. எனவே இதற்கு மாற்றுத் திட்டம் வகுக்கவேண்டும் எனவும், நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறதா எனவும் விவசாயிகள்

  கேள்வி எழுப்பினர்.

  இதற்கு பதிலளித்த அதிகாரிகள், நெய்யாறு சானலில் தண்ணீர் விடுவது குறித்த மாற்று ஏற்பாடுகளை அரசுதான் முடிவு செய்யவேண்டும் எனவும், நீரினைப்

  பயன்படுத்துவோர் சங்கத்துக்கான தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தனர். இதையடுத்து குமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைந்து

  வருவதாகவும், விதைநெல் தட்டுபாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கேட்டனர்.

  இதற்கு பதிலளித்த அதிகாரிகள், அரசின் கொள்முதல் மையங்களில் தேவையான விதை நெல் கையிருப்பு உள்ளதாகவும், 200 மெட்ரிக் டன் என்பதில் இருந்து, 210 மெட்ரிக்

  டன் அளவுக்கு வீரிய நெல்விதைகள் உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இதன்படி, கடந்த

  ஆண்டு 89 மி.மீ., அளவுக்கே மழை பெய்தது. ஆனால் நிகழாண்டு இதுவரையிலும் 141 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது தெரியவந்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai