சுடச்சுட

  

  குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகள் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினர்.

  தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, பார்வையிட்டு ஆய்வு செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

  தலைமையிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

  குமரி மாவட்டத்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலர் ராமச்சந்திரன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி

  மாவட்டத்துக்கு வந்த அவர், மேற்கு மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் ஆய்வு செய்தார்.

  குழித்துறையை அடுத்த வயக்கனூரில் பொதுமக்களிடம் கருத்து கேட்டார். மழை காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும்,

  இதைத் தடுக்க தடுப்பணை கட்டவேண்டும் என பொதுமக்கள் அப்போது கோரிக்கை விடுத்தனர். மேலும் பருத்திக்கடவு பகுதியில் உள்ள ஏரி மிகவும் பெரிதாக இருப்பதால்

  அருகில் உள்ள கிராமங்களுக்கு சுமார் 5 கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே  அங்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள்

  கோரிக்கை விடுத்தனர்.

  இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவான், பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அருண் சத்யா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

  தொடர்ந்து முன்சிறை, பாரதிபுரம், மங்காடு, திக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது மழைக் காலங்களில் மலையோரப் பகுதிகளுக்கு 3

  பிரிவுகளாக சென்று மழை எச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai