சுடச்சுட

    

    பேச்சிப்பாறை அருகே தாயிடமிருந்து தவறி வந்த யானைக் குட்டி மீட்பு

    By DN  |   Published on : 25th October 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து தவறி வந்த யானைக் குட்டியை வனத்துறையினர் வியாழக்கிழமை மீட்டனர்.

    களியல் வனச்சரகம் சிற்றாறு வனப் பகுதிகளில் யானைகள் கடந்த சில மாதங்களாக முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் கடந்த சில நாள்களாக கீழ்சிற்றாறு, வலியஏலா,

    தொடலிக்காடு உள்ளிட்ட வன எல்லை பகுதிகளில் நடமாடின. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் கீழ் சிற்றாறு பந்தடிகளம் என்ற இடத்தில் குட்டியானை ஒன்றின்

    அலறல் சப்தத்தை அப்பகுதியில் ரோந்து சென்ற வன ஊழியர் கேட்டுள்ளார்.

    உடனடியாக அவர் அப்பகுதியில் தேடிய போது பிறந்து சில நாள்களேயான ஆண் யானைக்குட்டி தன்னந்தனியாக தவித்து நின்றதைப் பார்த்து, பிற வன ஊழியர்களுக்கு

    தகவல் தெரிவித்தார்.  உடனடியாக களியல் வனச்சரகர் அபிலீஸ் தலைமையில் வனத் துறையினர் அப்பகுதிக்குச் சென்று அந்த யானைக் குட்டியை மீட்டு தொடலிக்காடு

    வன ஊழியர் குடியிருப்பிற்கு கொண்டு வந்தனர்.

    மாவட்ட வன அலுவலர் பார்வை: இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜு விஸ்வநாதன் மீட்கப்பட்ட யானைக்குட்டியைப் பார்வையிட்டார்.

    இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மீட்கப்பட்டுள்ள யானைக் குட்டி பிறந்து சுமார் 1 மாதம் வரை இருக்கலாம். இது தனது தாயிடமிருந்து தவறி வந்துள்ளது.  இதற்கு தொடர் மழை அல்லது வேறு காரணங்கள்

    இருக்கலாம். யானைக் குட்டி மீட்கப்பட்ட இடத்தில் தற்போது அதன் தாய் உள்ளிட்ட வேறு யானைகள் இல்லை. தற்போது இந்த யானைக் குட்டியின் தாயைத் தேடும்

    பணியினை வனத்துறை ஊழியர்கள் செய்து வருகின்றனர். யானைக் குட்டிக்கு உணவாக தற்போது புட்டி மூலம் பால் உள்ளிட்ட திரவ உணவுகள் கொடுக்கப்படுகிறது

    என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai