சுடச்சுட

    

    மீனவ கிராமத்தில் பதுக்கிய ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் பறிமுதல்

    By DN  |   Published on : 25th October 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குளச்சல் அருகே மீனவ கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த, 300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 200 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறக்கும் படை

    வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    குமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, பணியாளர் ஜான்பிரைட் உள்ளிட்டோர் கடற்கரைப் பகுதிகளில் சோதனை

    மேற்கொண்டனர். அப்போது, குளச்சல் அருகேயுள்ள பகுதியில் பாழடைந்த ஒரு கட்டடத்தின் பின்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 200

    லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் மண்ணெண்ணெய் மார்த்தாண்டம் மண்ணெண்ணெய் விநியோக மையத்திலும், ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக் கழக

    கிட்டங்கியிலும் ஒப்படைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai