சுடச்சுட

  

  நடிகர் ரஜினிகாந்தை பாஜகவில் சேரும்படி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

  கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முன்சிறை, மேல்புறம் வட்டாரப் பகுதிகளில் வாக்காளர்களுக்கு வெள்ளிக்கிழமை நன்றி

  தெரிவித்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குத் திட்டம்,

  தூய்மையான இந்தியா போன்ற திட்டங்களால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. வலுவான நாடாக இந்தியா மாறி வருவதால் உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கி வருகின்றன.

  இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்த பிரதமர் மோடி 15 திட்டங்களை வகுத்துள்ளார். தமிழகத்திலும் சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டங்கள் உள்ளன. இதற்காக

  மத்திய சுற்றுலாத் துறையின் நிதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

  மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் விரைவில் தமிழகத்துக்கு வர உள்ளார். அப்போது அவரை கன்னியாகுமரிக்கு வரவழைத்து ஆய்வு செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது.

  கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தென் தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தவில்லை.

  கட்டாயப்படுத்தவில்லை: பாஜகவுக்கு யார் வந்தாலும் வரவேற்போம். ரஜினிகாந்தை பாஜகவில் சேர யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஆன்மிகமும், தேசபக்தியும் கொண்ட

  அவர் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற விவரம் தெரிந்தவர். அவர் நல்ல முடிவு எடுப்பார். குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்புச்

  சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்துவது வேடிக்கையானது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் கமிட்டி

  அறிக்கைப்படிதான் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுவாக காடுகளால் மக்களுக்கு நன்மைதான் என்றாலும் குமரி மாவட்டத்தில் இச் சட்டத்தால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் பாஜக அதை எதிர்க்கும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai