Enable Javscript for better performance
\\\"28 இல் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள்\\\'- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கு குமரி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் மற்றும் குழுப் போட்டிகள் நாகர்கோவிலில் அக். 28ஆம்

    தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2014-2015 ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள

    விளையாட்டுப் போட்டிகள் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற உள்ளன.

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இம்மாதம் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்குகின்றன. போட்டியில் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.

    இதில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது.

     மாவட்டப் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். மாவட்ட அளவில் முதல்

    இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai