சுடச்சுட

  

  அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ. 30 லட்சம் நலத் திட்ட உதவி

  By DN  |   Published on : 26th October 2014 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் சனிக்கிழமை வழங்கினார்.

  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 1493 நபர்களுக்கு ரூ. 30 லட்சம்

  மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கி பேசியது: 60 அமைப்புசாரா தொழிலில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களையும், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட 27

  வகையிலான தொழிலில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு சமூக பாதுகாப்பு

  வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பிறப்பு முதல் இறப்பு முடிய பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டு வருகின்றன.

  வாரியங்களில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாரியங்களில் 18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு உள்பட்டவர்கள்

  தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம். தொழிலாளர் துறையின் கீழ் 17 வாரியங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த வாரியங்களில் பதிவு

  செய்துள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 685 பேருக்கும், தமிழ்நாடு

  உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 568 பேருக்கும், தமிழ்நாடு அமைப்புசாரா ஒட்டுநர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 240 பேர்களுக்கும் என மொத்தம் 1493

  நபர்களுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார் ஆட்சியர்.

  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. உதயகுமார், நாஞ்சில் ஏ. முருகேசன் எம்.எல்.ஏ., சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் து. லட்சுமி நாராயணன்,

  தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய தொழிலாளர் பிரதிநிதி என்.மனோகரதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.அண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai