சுடச்சுட

    

    களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி சாவு

    By DN  |   Published on : 26th October 2014 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சனிக்கிழமை பள்ளி மாணவி உயிரிழந்தார்.

    களியக்காவிளை அருகேயுள்ள ஒற்றாமரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார். இவர்,  இரும்புக் கம்பி, பெயின்ட் கடை நடத்தி வருகிறார். இவரது மகள்கள் இவன்ஜா

    (13), தர்மிஜா (11) ஆகியோர் திருவட்டாறு பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தனர்.

    இந்நிலையில் சனிக்கிழமை மாலையில் பள்ளி வேனில் இந்த மாணவிகள் வீட்டுக்குத் திரும்பினர்.  அப்போது ஒற்றாமரத்தில் வேனிலிருந்து இறங்கிய அவர்கள் சாலையைக்

    கடந்தபோது, எதிர்பாராதவிதமாக திருவனந்தபுரத்திலிருந்து குளச்சல் நோக்கி வந்த தமிழக அரசுப் பேருந்து அவர்கள் மீது மோதியது.

    இதில், இவன்ஜா, தர்மிஜா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் மீட்டு கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை

    தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    எனினும் வழியிலேயே இவன்ஜா உயிரிழந்தார். தர்மிஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை

    மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai