Enable Javscript for better performance
டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பளுகல் அரசுப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பளுகல் பேரூராட்சி இணைந்து நடத்திய இப் பேரணிக்கு பேரூராட்சித் தலைவர் பிஜூ தலைமை வகித்தார். தலைமையாசிரியர்

    சசிதரன், பளுகல் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமாரி, தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளியில் தொடங்கிய பேரணி மத்தம்பாலை, மொட்டமூடு, கண்ணுமாமூடு சென்று பள்ளியில் நிறைவடைந்தது. இதில், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுவை

    ஒழிப்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் மது, செயல் அலுவலர் எட்வெர்ட் ஜோஸ், வார்டு உறுப்பினர் சிவானந்தன், ஆசிரியர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய

    செவிலியர்கள் மற்றும் மாணவியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai