சுடச்சுட

  

  கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில்

  சனிக்கிழமை பாசனத்திற்காக பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

  குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை 10 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்த மழை

  அணைப் பகுதிகளிலும் இருந்ததாக பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.

  இதனால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1050 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 384 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மழை

  பெய்யத் தொடங்கியதும், பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. தற்போது பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38.70அடியாக உள்ளது. இந்த

  அணையின முழு கொள்ளளவு 48 அடி. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 67.60 அடி. இந்த அணையின் முழு கொள்ளளவு 77 அடி. தற்போது விவசாயிகள் நாற்று நடும்

  பணியைத் தொடங்கி உள்ளனர். எனவே கால்வாய்களை நம்பியுள்ள நிலங்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் பெருஞ்சாணி அணையில் இருந்து விநாடிக்கு 350

  கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு தோவாளை கால்வாய், அனந்தனாறு கால்வாய்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் சிற்றாறு 1 அணையில் இருந்து ஏற்கெனவே

  விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

   காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் அதிகபட்சமாக 69.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும்

  பேச்சிப்பாறையில் 20.6 மி.மீ., பொய்கை 12.8 மி.மீ., நாகர்கோவில் 3 மி.மீ., கன்னிமார் 11.5 மி.மீ., ஆரல்வாய்மொழி 12.8 மி.மீ., ஆனைக்கிடங்கு 58 மி.மீ. மழை பதிவாகி

  உள்ளது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

  ஆறுகளில் வெள்ளம்:  இம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கோதையாறு, பரளியாறு, பழையாறு ஆகியவற்றில்  வெள்ளப் பெருக்கு

  ஏற்பட்டுள்ளது.  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட பிரதான அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

  திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை: கோதையாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆறு வழியாக திற்பரப்பு அருவிக்கு வரும் வெள்ளம் கட்டுக்கடங்காமல்

  உள்ளது. அருவி அருகே செல்லமுடியாத அளவிற்கு இங்கு வெள்ளமென நீர்கொட்டுவதல், இங்கு குளிக்க திற்பரப்பு பேரூராட்சி தடை விதித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai