Enable Javscript for better performance
நல்லூர் அரசுப் பள்ளியில்  அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் அருகே உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜோபிரகாஷ் தலைமை வகித்தார். பேராசிரியை சுனிதா முன்னிலை வகித்தார்.

    கண்காட்சியை முன்னாள் தலைமை ஆசிரியரும், இம்மானுவேல் அரசர் கல்வியியல் கல்லூரியின் நிர்வாக அலுவலருமான பென்சாம் தொடங்கிவைத்துப் பேசினார்.

    பேராசிரியைகள் வினிலா,ஹேமலின் சுபலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    கண்காட்சியில் சுற்றுச்சூழல் தகவல் தொழில்நுட்பம், ஆற்றல் மாற்றங்கள், வேதிவினைகள், அழிந்துவரும் மூலிகைகள், கணித வடிவங்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட

    தலைப்புகளில் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இதையடுத்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஆசிரியர்கள் மெரின்,ராஜினி,கீதா,விஜிலா,சகுந்தலா மற்றும் பள்ளி மாணவர்,மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai