சுடச்சுட

  

  நாகர்கோவிலில் சிகரம் வழிகாட்டும் மையம் திறப்பு விழா நடைபெற்றது.

  முளகுமூட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இம்மையம் அனைத்து தேர்வு மற்றும் நுழைவு தேர்வுப் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில்

  நாகர்கோவிலில் சிகரம் வழிகாட்டு மையம் திறக்கப்பட்டது. அகில இந்திய ஆயர் பேரவையின் துறவியர் பணிக்குழுச் செயலர் ஜாண் குழந்தை தலைமையில், டாக்டர்

  விஜயகார்த்திகேயன் மையத்தை திறந்து வைத்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர். டேனியல், புனித ஜெரோம் கலை

  மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அமல்ராஜ், திருவிதாங்கோடு முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தாளாளர் டாக்டர் முகமது அலி, திருவருள்

  பேரவைச் செயலர் சதாசிவம், ஒருங்கிணைப்பாளர் மரிய வின்சென்ட், லயோலா அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரித் தலைவர் நிக்கோலாஸ் ஆகியோர்

  உரையாற்றினர். இம்மையத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த நிலையை அடைய பல பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள்,

  சொற்பொழிவுகள் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர் மாவட்டத்தில் முளகுமூடு, திருத்துவபுரம் ஆகிய இடங்களில் இதுபோன்ற மையங்கள் செயல்பட்டு

  வருகின்றன. மேலும் இங்கு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும் என சிகரம் இயக்குநர் செபாஸ்டின் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai