சுடச்சுட

  

  பழுதான சுசீந்திரம் ரயில்வே பாலத்தைச் சீரமைக்கக் கோரிக்கை

  By DN  |   Published on : 26th October 2014 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள சுசீந்திரம் ரயில்வே பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவேண்டும் என

  பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் பாதையில் சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் மேல்பகுதியில் உள்ள சுவர்கள் மிகவும் பழுதான

  நிலையில் உள்ளன. சுவர்களில் உள்ள கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக இப்பகுதியில் தொடர்மழை பெய்து

  வருவதால் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இதுகுறித்து, சுசீந்திரம் கவிமணி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கூறியதாவது: கன்னியாகுமரியில் இருந்து இந்தியாவின் முக்கியப் பகுதிகளுக்கு இவ்வழியே

  நாள்தோறும்  ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்தப் பாலம் பழுது நீக்கப்பட்டது.

  தற்போது பாலத்தின் மேற்சுவர்கள் பழுதடைந்துள்ளதால் அவை இடிந்து தண்டவாளத்தின் மீது விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் பாலத்தின்

  சுற்றுச் சுவர்களை பழுது நீக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai