சுடச்சுட

  

  பேச்சிப்பாறை அருகே காட்டிலிருந்து தவறி வந்த யானைக் குட்டியை மீண்டும் காட்டில் விட நடவடிக்கை

  By DN  |   Published on : 26th October 2014 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே காட்டிலிருந்து தவறி வந்த யானைக் குட்டியை மீண்டும் காட்டில் அதன் தாயுடன் சேர்ப்பதற்கான பணிகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

  களியல் வனச்சரகம் கீழ்சிற்றாறு தொடலிக்காடு பகுதியில் தாயிடமிருந்து தவறிய யானைக் குட்டி ஒன்றை வனத்துறையினர் வியாழக்கிழமை மீட்டு பாராமரித்து

  வருகின்றனர். இந்த யானைக் குட்டியை மீண்டும் காட்டில் அதன் தாயுடன் சேர்க்கும் பணியினை தற்போது செய்து வருகின்றனர்.

  அரண் அமைப்பு: இதற்காக யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில்  மரத்தாலான கூண்டு போன்ற  அரண் ஒன்றை அமைத்து அதில் குட்டியானையை விட முடிவு

  செய்துள்ளனர்.  இந்தக் கூண்டில் நிற்கும் யானைக் குட்டியின் அலறலைக் கேட்டு அதன் தாய் யானை, கூண்டை உடைத்து குட்டியை அழைத்துச் செல்லும் என

  வனத்துறையினர் கருதுகின்றனர்.  இதற்காக கூண்டு அமைக்கும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. மேலும் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு செய்யவும் முடிவு

  செய்துள்ளனர். எனினும் சனிக்கிழமை இரவு வரை யானைக் குட்டியை அந்தக் கூண்டில் வனத்துறையினர் விடவில்லை.

  திருக்கோயிலுக்கு வழங்க வேண்டும்: இதற்கிடையே காட்டிலிருந்து தவறி வந்த யானைக்குட்டியை குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டுமென்ற

  கோரிக்கையும் மாவட்டத்தில் எழுந்துள்ளது. அண்மையில் குழித்துறை கோபாலன் யானை இறந்த நிலையில்  தற்போது கிடைத்துள்ள குட்டி யானையை திருக்கோயில்

  நிர்வாகத்திற்கு வழங்க அரசு முன் வரவேண்டுமென்று  அவர்கள் கூறுகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai