சுடச்சுட

    

    மங்கள்யான் வெற்றி மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் சாதிக்கும் எண்ணம் மேலோங்கியுள்ளது

    By DN  |   Published on : 26th October 2014 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மங்கள்யான் வெற்றியின் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் சாதிக்கும் எண்ணம் மேலோங்கியுள்ளதாக மகேந்திரகிரி இஸ்ரோ நிலைய இயக்குநர் டி. கார்த்திகேசன் கூறினார்.

    ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிறைவு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கி அவர் மேலும்

    பேசியதாவது; இந்தியா தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது. முதல் முயற்சியிலேயே மங்கள்யான் செயற்கைக்கோளை

    செவ்வாய்க்கிரகத்திற்கு செலுத்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம்.  இந்த சாதனையை விண்வெளித் துறையில் முன்னணியில் இருக்கும் இதர நாடுகள் நம்மை

    ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. இந்த சாதனை மூலம் இந்தியாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் தன்னம்பிக்கையும்,  சாதிக்கும் மனப்போக்கும் ஏற்பட்டுள்ளது. நாம்

    திட்டமிட்டு அர்ப்பணிப்புடன்  உழைத்தால் இலக்குகளை எளிதில் அடைய முடியும். ஆசிரியர்கள், பெற்றோர்கள் எப்போதும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். தளராத

    நம்பிகையை மாணவர்களிடமும், குழந்தைகளிடமும் விதைக்க வேண்டும். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை கற்றுக் கொடுக்க வேண்டும். கல்லூரிகள் தொழிற்துறைக்கு

    பொருந்தக் கூடிய வகையில் மாணவர்களை தயார் செய்ய வேண்டும். பள்ளிக் கல்லூரிகளில்  நடைபெறும் அறிவியல் கண்காட்சிகள் மாணவர்களின் அறிவியல் திறனை

    வெளிக் கொணருவதற்கு சிறந்த வாய்ப்பாகும் என்றார் அவர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஒய். சுஜர் தலைமை வகித்தார். துணை முதல்வர் வி. சுந்தர்ராஜ் வரவேற்றார். தாளாளர் ஜி. ரசல்ராஜ், துணைத் தாளாளர் ஷைனி தெரசா

    ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். இயக்குநர் ஹரிஹரசுப்பிரமணி, துணை இயக்குநர் சாபு குமார், மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட மைய துணை மேலாளர் எஸ். கண்ணு 

    ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  அறிவியல் கண்காட்சியில் மணலிக்கரை புனித மரிய கொரட்டி மேல் நிலைப்பள்ளி முதல் இடமும், திருவனந்தபுரம் பட்டம் புனித மேரி

    பள்ளி இரண்டாம் இடமும், பள்ளியாடி ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடமும் பிடித்தன.

     

    மங்கள்யான் வெற்றியில் மகேந்திரகிரி விஞ்ஞானிகளின் பங்கு

    நிகழ்ச்சிக்குப் பின்னர் டி.கார்த்திகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மங்கள்யான் வெற்றியில் மகேந்திரகிரி திரவ எரிபொருள் கட்டுப்பாட்டு மைய விஞ்ஞானிகளின்

    பங்கும் உள்ளது.

    மங்கள்யான் செயற்கைக்கோளை செவ்வாய்க்கிரக வட்டப்பாதைக்குள் நிலைநிறுத்துவற்கான ஏ.எல்.எம். இயந்திரம் மகேந்திரகிரியில் சோதனை செய்யப்பட்டதாகும்.

    செயற்கைக்கோளை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி சி-25 ராக்கெட்டின் தொடக்க நிலைகளும் மகேந்திரகிரியில் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டவகைளாகும்.

    அடுத்ததாக டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் 4 ஆயிரம் கிலோ எடை கொண்ட விண்கலத்தை சுமந்து செல்லும் திறன்

    கொண்டதாகும். இந்த ராக்கெட்டின் தொடக்க நிலை பாகங்களை மகேந்திரகிரியில் சோதனை செய்து அனுப்பியுள்ளோம்.

    மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோட்டமாக ஆளில்லாமல்  விண்வெளிக்குச் சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையிலான ராக்கெட்

    வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் பாகங்களும் மகேந்திரகிரியில் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai