சுடச்சுட

    

    கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    பள்ளி வளாகத்தில் தொடங்கிய இப் பேரணிக்கு தாளாளர் அருள்பணி எஸ்.நசரேன் தலைமை வகித்தார். ஆசிரியை மார்க்ரெட் ஜெயின் சாந்தி பேரணியை தொடங்கி

    வைத்தார். பள்ளி தேசிய படை மாணவர்கள் மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

    பேரணி சர்ச் ரோடு சந்திப்பு, அஞ்சுகூட்டுவிளை வழியாக காந்தி மண்டத்தில் நிறைவடைந்தது. இதில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முகைதீன்பிச்சை, பசுமை ஆர்வலர்

    சாகுல், தேசிய மாணவர் படை அலுவலர் அஜாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai