சுடச்சுட

  

  தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுகொண்டுள்ளார்.

  குமரி மாவட்டம், தக்கலை அருகே அழகிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

  தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகப் பெய்த மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை

  எடுக்க வேண்டும்.

  சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த பழனி சந்தேகத்தின் அடிப்படையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக எல்லைப் பகுதியிலுள்ள மக்களைப் பாதுகாக்கும்

  வகையில் இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

   இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென சுப்பிரமணியன்சுவாமி கூறியுள்ளார். இது ஒட்டுமொத்தமாக தமிழ்ச் சமூகத்தை வம்புக்கு

  இழுக்கும் செயலாகும். அவர் இதுபோன்று பேசி வருவதை பாஜக கட்டுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai