சுடச்சுட

    

    கொல்லங்கோடு அருகே மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழந்தார்.

    கொல்லங்கோடு காவல் சரகம் குளப்புறம் புலிச்சான்விளை பகுதியைச் சேர்ந்தவர் பவுலோஸ். வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சந்திரிகா. 

    தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் பபிதா (9) (படம்). அப்பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை

    மாலையில் பள்ளியிலிருந்து வந்தபின் வீட்டில் மின்இணைப்பில் போட்டிருந்த செல்போன் சார்ஜர் வயரை தொட்டாராம். அப்போது மின்சாரம் பாய்ந்து மாணவி தூக்கி

    வீசப்பட்டார். பபிதாவின் அலறல் சப்தம் கேட்டு தாயார் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து மயங்கி கிடந்த அவரை மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு

    சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்தார். இது குறித்து கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து

    விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai