வட்டக்கோட்டையில் ஆட்சியர் ஆய்வு
By DN | Published on : 26th October 2014 01:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வட்டக்கோட்டையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் ஆய்வு செய்தார்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க வட்டக்கோட்டை. மத்திய தொல்பொருள்
ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோட்டையினை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
கோட்டையின் பின்பகுதியில் இயற்கை எழில் வாய்ந்த கடற்கரை அமைந்துள்ளது. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்கும்
வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது மாவட்ட சுற்றுலா அலுவலர்
வே.ஹரிராதாகிருஷ்ணன், லீபுரம் ஊராட்சித் தலைவர் கே.முத்துசுவாமி ஆகியோர் உடனிருந்தனர்.