சுடச்சுட

  

  வரலாற்று ஆய்வாளர் எஸ். பத்மநாபனுக்கு அன்னை தெரசா விருது

  By DN  |   Published on : 26th October 2014 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகர்கோவிலைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் எஸ். பத்மநாபனுக்கு அன்னை தெரசா விருதை விஜயதாரணி எம்.எல்.ஏ. வழங்கினார்.

  நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் ரோகிணி சமூக அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

  விழாவுக்கு, அறக்கட்டளை நிறுவனர் எஸ். சேவியர் தலைமை வகித்தார். எம்.ஏ.லில்லீஸ் குமாரி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். விழாவில்,

  விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி பங்கேற்று வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான எஸ். பத்மநாபனுக்கு அன்னை தெரசா விருதை வழங்கினார்.

  நிகழ்ச்சியில் விழாக்குழுத் தலைவர் எல்.ஏ. பொலிகார்ப், டி. ராதாகிருஷ்ணன், பி. சாந்திதாஸ், முத்துசுவாமி குமார், ஏ. பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  அறக்கட்டளைச் செயலர் கே. அனிதாபாய் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai