Enable Javscript for better performance
வாலிபால் போட்டி: மயிலாடி அணி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், மயிலாடி அணி சிறப்பிடம் பெற்றது.

    மாவட்ட அளவிலான  வாலிபால் போட்டிகள் கன்னியாகுமரியை அடுத்த முகிலன் குடியிருப்பில் நடைபெற்றது. இதில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. வியாழக்கிழமை

    இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், மயிலாடி ஆர்.ஏ.ஆர். கைப்பந்துக் கழக அணி லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தி முதலிடம் பெற்றது.

    இறுதிப் போட்டியை முகிலன் குடியிருப்பு ஊர்த் தலைவர் ராஜகோபால் தொடங்கி வைத்தார். பரிசளிப்பு விழாவுக்கு சக்தி கைப்பந்துக் கழகப் பொருளாளர் டி.சி. மகேஷ்

    தலைமை வகித்தார். குமரி மாவட்ட கைப்பந்துக் கழகச் செயலர் ரத்தினபாண்டியன் பரிசுகளை வழங்கினார்.

    முதல் பரிசு பெற்ற மயிலாடி அணிக்கு ரூ. 4 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரி அணியும், மூன்றாம்

    பரிசை முகிலன்குடியிருப்பு சக்தி கைப்பந்துக் கழக அணியும், நான்காம் பரிசை தென்தாமரைகுளம் தாமரை கைப்பந்துக் கழக அணியும் பெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai