Enable Javscript for better performance
ஐரேனிபுரம் சி.எஸ்.ஐ. சபையில் விற்பனை திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் அருகே உள்ள ஐரேனிபுரம் சி.எஸ்.ஐ. சபையில் சனிக்கிழமை விற்பனைத் திருவிழா நடைபெற்றது.

    ஐரேனிபுரம் சேகரம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சேகர பாஸ்டர் ஆலிவர் ஸ்டேன்லி தலைமை வகித்தார். பாஸ்டர்கள் மத்தியாஸ்(வெங்கஞ்சி), சுந்தர்ராஜ் (கிராத்தூர்), ஆஸ்டின் எட்வின் ரிச்சர்டு (பள்ளியாடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயர் தேவகடாட்சம் முதல் விற்பனையை தொடங்கிவைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் சேகர வட்டாரச் செயலர் போவாஸ், ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி ஜெபராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    கண்காட்சியில், பலவகை உணவுப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை செல்வராஜ், வில்சன், மோகன்தாஸ், சிம்சன், சத்தியராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் 5 சேகர சபையின் கீழ் உள்ள 62 சபை பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai