சுடச்சுட

    

    மார்த்தாண்டம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (38). கட்டடத் தொழிலாளி. இவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மார்த்தாண்டம் அருகேயுள்ள இரவிபுதூர்கடையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நீண்ட நேரமாக வீட்டுக் கதவு திறக்கப்படாததால் அருகிலிருந்தவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர்.

    அப்போது முருகேசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai