சுடச்சுட

    

    கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணியிடம்: பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

    By DN  |   Published on : 27th October 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக் காலியிடங்களுக்கு பதிவுமூப்பு உத்தேச பட்டியலை குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் சண்முகசுந்தர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலரால் கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக் காலியிடங்கள் சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநருக்கு தெரிவிக்கப்பட்டு பட்டியல் கோரப்பட்டுள்ளது.

    இந்து ஆதிதிராவிடர் 3.9.2011 வரை பதிவு செய்த அனைத்து முன்னுரிமை பிரிவினர்களும், முன்னுரிமை இல்லாதவர்கள் 24.4.2008 வரை பதிவு செய்தவர்கள். மிகவும் பிற்பட்டவர்கள் 3.9.2011 வரை பதிவு செய்த அனைத்து முன்னுரிமை பிரிவினர்களுக்கும், முன்னுரிமை இல்லாதவர்கள் 21.8.2008 வரை பதிவு செய்தவர்கள்.

    பிற்பட்ட முஸ்லிம் 19.3.2013 வரை பதிவு செய்த அனைத்து முன்னுரிமை பிரிவினர்களும், முன்னுரிமை இல்லாதவர்கள் 17.8.2009 வரை பதிவு செய்தவர்கள்.

    பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுவகுப்பினர் 3.9.2012 வரை பதிவு செய்த அனைத்து முன்னுரிமை பிரிவினர்களும், முன்னுரிமை இல்லாதவர்கள் 22.8.2008 வரை பதிவு செய்தவர்கள்.

    கல்வித் தகுதி உச்ச வயது வரம்பு மற்றும் பதிவு மூப்புக்கு உள்பட்ட பதிவுதாரர்களின் பட்டியல் மாநில அளவில் தயார் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இந்த பதிவு மூப்பு விவரங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பலகையில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட இணையதளமான ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ஹ்ஹந்ன்ம்ஹழ்ண்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இல் வெளியிடப்பட்டுள்ளது.

    குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த தகுதியான பதிவுதாரர்கள் தங்கள் பெயர் பதிவு மூப்பு பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்ய தங்களது அசல் கல்விச் சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என தெரிவித்துள்ளார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai