சுடச்சுட

    

    கருங்கல் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தல்

    By DN  |   Published on : 27th October 2014 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருங்கல் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர்களை நியமித்து நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கருங்கல் அரசு மருத்துவமனையில் கருங்கல், சுண்டவிளை, ஆலஞ்சி, மிடாலக்காடு, குறும்பனை, மிடாலம், வெள்ளியாவிளை, பாலூர், மத்திகோடு, திப்பிரமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 400 வெளிநோயாளிகள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    இங்கு மகப்பேறு அறை, உள்நோயாளிகள் தங்கும் கட்டட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

    ஆனால் இந்நாள்வரை நிரந்தரமாக ஒரு மருத்துவர்கூட இல்லை. நாள்தோறும் காலை 7.30  மணி முதல் பகல் 12 மணி வரை ஒரு மருத்துவர் வந்து வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

    திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் சிறப்பு மருத்துவர்களால் வெளிநோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் கூட்டம் அதிகம் காணப்படும்.

    ஆனால் மருத்துவர்கள் முறையாக குறிப்பிட்ட நேரத்துக்கு  வருவதில்லையாம். இதனால் நோயாளிகள் நீண்டநேரம் வரிசையில் நின்று, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

    அரசு மருத்துவமனைகளில் பணி செய்யும் மருத்துவர்களில் சிலர், தங்களுடைய  மருத்துவமனைகளில் பணி முடிந்தபின்பே இங்கு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    குறிப்பாக, கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் முதலுதவி செய்வதற்கும் இங்கு நிரந்தர மருத்துவர்கள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து, சமூக ஆர்வலர் கிளாட்சன் கூறியதாவது: இம்மருத்துவமனையில் மகப்பேறுக்கான அனைத்து வசதிகள் இருந்தும், மகப்பேறுக்கான நிரந்தர பெண் மருத்துவர் இல்லை. எனவே இம்மருத்துவமனையில் முதல் கட்டமாக ஒரு நிரந்தர மருத்துவரை நியமித்து 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai