Enable Javscript for better performance
குமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ. 1 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ. 1 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

    By DN  |   Published on : 27th October 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் சூரியஒளி மின்சாரம் மூலம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அளவுக்கு குடிநீர் கிடைக்காத சூழ்நிலை இருந்து வருகிறது.

    இதைப் போக்கும் வகையில், மத்திய அரசின் புவிசார் விஞ்ஞான அமைச்சகத்தின் துணையுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு நடத்தினர்.

    முதல் கட்டமாக நாள்தோறும் 10ஆயிரம் லிட்டர் தண்ணீர் தயாரிக்கப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்தனர்.

    ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்துக்கான பூமிபூஜை அக். 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. 10 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் நவீன கருவிகள் அமைக்கப்பட உள்ளன.

    பூமிபூஜை நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி. இயந்திரவியல் பேராசிரியர் டாக்டர் மணி, விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலர் பானுதாஸ், பொருளாளர் ஹனுமந்தராவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai