சுடச்சுட

    

    குளச்சல் அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் இறந்தார்.

    குளச்சல் அருகே மண்டைக்காடு தரையன்விளையைச் சேர்ந்தவர் ரசல். இவரது மகன் பிரபாகரன் (29). கூலித் தொழிலாளி.

    இவர், ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள குளத்துக்கு  குளிக்கச் சென்றார். அப்போது கரையிலிருந்த தென்னை மரத்தில் இருந்து தேங்காய் குளத்துக்குள்  விழுந்தது.

    இதையடுத்து தேங்காயை எடுப்பதற்காக பிரபாகரன் தண்ணீரில் நீந்திச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தொடர்ந்து நீந்த முடியாமல் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

    இதுகுறித்து தகவலறிந்த குளச்சல் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று பிரபாகரனின் சடலத்தை மீட்டனர்.

    மேலும், இதுகுறித்து குளச்சல் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai