Enable Javscript for better performance
சூழியல் பாதுகாப்பு வளையம்: குலசேகரத்தில் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சூழியல் பாதுகாப்பு வளையம்: குலசேகரத்தில் பொதுக்கூட்டம்

    By DN  |   Published on : 27th October 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்ட வனப்பகுதிகளை ஒட்டிய விவசாயிகளின் பட்டா நிலங்களை சூழியல் பாதுகாப்பு வளையத்துக்குள் சேர்ப்பதைக் கண்டித்து குலசேகரத்தில் குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு ரப்பர் விவசாயிகள் சங்கத் தலைவர்  எஸ். நெல்சன் தலைமை வகித்தார். செயலர் சி. பாலசந்திரன், வழிகாட்டிப் பேராசிரியர் ஜார்ஜ் ஸ்டீபன், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கத் தலைவர் எம்.எஸ்.மணி, செயலர் டி. கோபாலகிருஷ்ணன், பூமி பாதுகாப்புச் சங்கத் தலைவர் பத்மதாஸ், தடிக்காரன்கோணம் விவசாயிகள் சங்கத் தலைவர் ரவி உள்ளிட்டோர் பேசினர்.

    இதில், ரப்பர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏ. அகஸ்டின், கேசவன் நாயர், கேசவன்குட்டி, லூயிசன் மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai