சுடச்சுட

    

    தீபாவளி விடுமுறை முடிந்தது: நாகர்கோவிலில் ரயில், பேருந்துகளில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

    By DN  |   Published on : 27th October 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளி முடிந்து வெளியூர் செல்வதற்காக பயணிகள் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.

    கூட்டநெரிசலைச் சமாளிக்க நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப்  போக்குவரத்துக் கழகமும், நாகர்கோவில் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகமும் சிறப்புப் பேருந்துகளை இயக்கின. இதனால் பயணிகள் சிரமமின்றி செல்ல முடிந்தது.

    தீபாவளி பண்டிகையை கொண்டாட ஊருக்கு வந்த பொதுமக்கள் மீண்டும் சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு கடந்த சனிக்கிழமைமுதலே செல்லத் தொடங்கினர்.  இதனால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

    தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சென்னைக்கு  பிற்பகல் முதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கியது.

    மேலும் திருச்சி, மதுரை, திருப்பூர், கோவைக்குக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு விரைவுப் பேருந்துகளில் செல்ல பெரும்பாலானவர்கள்  முன்பதிவு செய்திருந்தனர். பெங்களூரு செல்லும் விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

    கன்னியாகுமரி, அனந்தபுரி ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் சிரமமின்றி ரயிலில் செல்ல முடிந்தது. ஆனால், பொதுப்பெட்டிகளில் முன்பதிவில்லாப் பயணிகள் இருக்கையைப் பிடிக்க ரயில் வரும்முன்பே நடைமேடையில் காத்திருந்தனர்.

    அவர்களை ரயில்வே போலீஸார் ஒழுங்குபடுத்தனர். எனினும், கன்னியாகுமரி விரைவு ரயில் மாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் வந்ததும் முண்டியடித்துக் கொண்டு பயணிகள் இடம்பிடிக்க முயன்றனர்.

    கன்னியாகுமரி விரைவு ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் அனந்தபுரி ரயிலுக்காக காத்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai