Enable Javscript for better performance
நவ.1 இல் சென்னையில் \\\"தமிழகப் பெருவிழா\\\'- Dinamani

சுடச்சுட

    

    சென்னை தலைநகர் தமிழ்ச் சங்கம் சார்பில் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழகப் பெருவிழாவில் கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மைய பொதுச்செயலர் டாக்டர் எஸ். பத்மநாபன் கலந்து கொள்கிறார்.

    இதுகுறித்து இம்மையத்தின் செயலர் துரை. நீலகண்டன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

    சென்னை தலைநகர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகப் பெருவிழா நடைபெறுகிறது. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1 ஆம் தேதியன்று வண்டலூரில் உள்ள வள்ளல் வெள்ளைச்சாமி அரங்கில் இவ்விழா மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

    மாநிலக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும், தலைநகர் தமிழ்ச் சங்கத் தலைவருமான முனைவர் முகிலை ராசபாண்டியன் தலைமை வகிக்கிறார். தலைநகர் தமிழ்ச் சங்க அறக்கட்டளைத் தலைவர் கு. வெள்ளைச்சாமி, தலைநகர் தமிழ்ச் சங்கச் செயலர் புலவர் த. சுந்தரராசன், துணைத் தலைவர் புலவர் வெற்றியழகன், பொருளாளர் கவிஞர் அனகை நா.சிவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றுப் பேரவைத் தலைவர் நாஞ்சில் நடராசன், வரலாற்று ஆய்வாளர் நெல்லை நெடுமாறன், குமரி மாவட்ட வரலாற்றுப் பேரவை செயலர் மு.ஆ.பெருமாள் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

    வரலாற்று அறிஞரும், கன்னியாகுமரி வரலாற்று, பண்பாட்டு ஆய்வு மைய பொதுச்செயலருமான டாக்டர் எஸ்.பத்மநாபன் சிறப்புரையாற்றுகிறார் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai