சுடச்சுட

  

  பால் விலை உயர்வைக் கண்டித்து அக்.31இல் திமுக ஆர்ப்பாட்டம்

  By DN  |   Published on : 27th October 2014 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பால் விலை உயர்வைக் கண்டித்து ஆரல்வாய்மொழியில் அக்டோபர் 31ஆம் தேதி போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.

  நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் தோவாளை ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு ஒன்றிய அவைத்தலைவர் தம்புரான் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்.

  மாவட்டச் செயலர் என். சுரேஷ்ராஜன் கலந்துகொண்டார்.  பொருளாளர் பரமேஸ்வரன், பேரூர் செயலர்கள் சுப்பிரமணியன், ஜெயக்குமார், நாகராஜன், பாக்கியராஜ், செல்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தில், தாழக்குடியில் திமுக கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டை சேதப்படுத்தியவர்களை கண்டிப்பது; ஆவின் பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அக்டோபர் 31ஆம் தேதி ஆரல்வாய்மொழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai