சுடச்சுட

    

    வீரகேரளம்புதூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பைக் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஆலங்குளம், அண்ணாநகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஏ.கிங்ஸ்டன் (39). இவர், ஆலங்குளம் டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், வீரகேரளம்புதூர்

    அருகேயுள்ள கல்லூத்து கிறிஸ்தவ தேவாலயத்தில் உபதேசியராகவும் பணி புரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை கல்லூத்து தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து தனது

    பைக்கில் கிங்ஸ்டன் வீடு திரும்பினாராம்.

    அப்போது வீரகேரளம்புதூர் - அத்தியூத்து சாலையில் முத்துகிருஷ்ணப்பேரி அருகே சாலையின் குறுக்கே மாடு புகுந்ததாம். இதையடுத்து பைக்கின் வேகத்தை குறைத்த

    கிங்ஸ்டன் மீது பின்னால் வந்து கொண்டிருந்த கார் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த வீரகேரளம்புதூர்

    போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரகேரளம்புதூர்

    போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai