சுடச்சுட

  

  கைலாஷ் சத்யார்த்தி மற்றும் மலாலா ஆகியோருக்கு அண்மையில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதையடுத்து மணலிக்குழிவிளை மலாலா இளம் பேச்சாளர் பேரவையினர் ஞாயிற்றுக்கிழமை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

  திக்கணங்கோடு அருகே மணலிக்குழிவிளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் மலாலா இளம்பேச்சாளர் பேரவை செயல்பட்டு வருகிறது.

  இந்த அமைப்பின் சார்பில் பங்கு அருள்பணியாளர் இவாஞ்சிலின் எம்.பெஸ்கியின் முயற்சியில் குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு, குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு, பெண் கல்வி ஊக்குவித்தல் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டு பட்டிமன்றங்கள், கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.

  அண்மையில் இந்தியரான கைலாஷ்சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

  இந்நிலையில் அவர்களைப் பாராட்டி மணலிக்குழிவிளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் விழா நடைபெற்றது.

  விழாவையொட்டி நடைபெற்ற திருப்பலிக்கு பங்கு அருள்பணியாளர் இவாஞ்சலின் எம்.பெஸ்கி தலைமை வகித்தார். இவ்வமைப்பைச் சேர்ந்த குழந்தைகள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தனர். பின்னர் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai