சுடச்சுட

    

    "வளைந்த கால் குறைபாடு: நவீன சிகிச்சை முறையில் குணப்படுத்தலாம்'

    By DN  |   Published on : 27th October 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நவீன சிகிச்சை முறையில் வளைந்த காலை குணப்படுத்தலாம் என மருத்துவர் எஸ்.கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பார்வதிபுரம் அருகே உள்ள கிருஷ்ணகுமார் எலும்புமுறிவு மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.கிருஷ்ணகுமார் கூறியதாவது: வளைந்த கால் என்பது பிறவியிலேயே காணப்படும் ஒரு குறைபாடாக இருக்கிறது. இக்குறைபாடு சரி செய்யப்படாத குழந்தைகள் நிரந்தர ஊனமுற்றவர்களாக மாறுகிறார்கள்.

    பிறந்த உடனேயே சிகிச்சை செய்யாமல் விடப்படும் வளைந்த காலுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமாகும். இக்குறைபாட்டை ஆரம்பத்திலேயே சரி செய்ய பான்செட்டி எனும் சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.

    எங்கள் மருத்துவமனையில் இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தி பல நூறு குழந்தைகளின் வளைந்த கால் குறைபாட்டை வெற்றிகரமாக சரி செய்துள்ளோம். இப்போது அந்த குழந்தைகள் மற்ற சாதாரண குழந்தைகளைப்போல் வாழ்கிறார்கள்.

    இதன்விளைவாக சமுதாய நோக்கத்துடன் ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3212-ன் உறுதுணையுடன் கிளப்ஃ புட் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளை கடந்த ஆண்டு எங்கள் மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.

    இந்த பவுண்டேஷன் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை சுமார் 18 குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை பிறந்த ஒரு வாரத்துக்குள்

    எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படும்.

    இத்தகவலை அறிந்தவர்கள் எங்கள் மருத்துவமனைக்கு வழிகாட்டுவதால், ஒரு குழந்தையின் சவாலான எதிர்காலத்தை பாதுகாத்த மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு அவர்களிடையே தங்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai