சுடச்சுட

    

    2 ஆவது நாளாக சிற்றாறு அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்

    By DN  |   Published on : 27th October 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டம் சிற்றாறு அணையில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில் சிற்றாறு அணைகளின் நீர்மட்டம்   உச்ச அளவான 18 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    அதேவேளையில் மழை தீவிரமாக பெய்து வருவதால் இந்த அணைகளில் 16.50 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்காமல், கூடுதலாக வரும் தண்ணீரை பொதுப்பணித் துறையினர் உபரி மதகுகள் வழியாக வெளியேற்றி வருகின்றனர்.

    இப்போது சிற்றாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், சிற்றாறு 1 அணையின் உபரி மதகுகள் வழியாக விநாடிக்கு 300 கனஅடி நீர் சனிக்கிழமை வெளியேற்றப்பட்டது.

    இந்த அணைகளில் உள்வரத்து தொடர்ந்து அதிகமாக இருந்து வருவதால் ஞாயிற்றுக்கிழமையும் விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் உபரி மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

    திற்பரப்பு அருவியில் வெள்ளம்: சிற்றாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் கோதையாற்றுடன் கலந்து  திற்பரப்பு அருவி வழியாகப் பாய்கிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai