சுடச்சுட

    

    29 இல் ஊராட்சி ஒன்றிய அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

    By DN  |   Published on : 27th October 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவில் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 29ஆம் தேதி தொடங்குகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2014-2015 ஆம் ஆண்டுக்கான தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகள் ராஜீவ் காந்தி கேல் அபியான் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெற உள்ளன.

    அக்டோபர் 29 ஆம் தேதியில் முன்சிறை ஒன்றியம்- கூடைப்பந்து, தடகளம், கபடி, வாலிபால், புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி, வாவறை.

    அகஸ்தீசுவரம் ஒன்றியம்- கூடைப்பந்து, தடகளம், கபடி, வாலிபால், புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, அழகப்பபுரம். தோவாளை ஒன்றியம் - கூடைப்பந்து, தடகளம், கபடி, வாலிபால், தோவாளை லயோலா தொழில்நுட்பக் கல்லூரி.

    இம்மாதம் 30 ஆம் தேதியில் தக்கலை ஒன்றியம் - கூடைப்பந்து, தடகளம், கபடி, வாலிபால், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முளகுமூடு.

    குருந்தன்கோடு ஒன்றியம் - கூடைப்பந்து, தடகளம், கபடி, வாலிபால், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இலக்குமிபுரம்.

    மேல்புறம் ஒன்றியம் - கூடைப்பந்து, தடகளம், கபடி, வாலிபால், புனித மேரிஸ் மேல்நிலைப் பள்ளி, மேல்பாலை. கிள்ளியூர் ஒன்றியம்- கூடைப்பந்து, தடகளம், கபடி, வாலிபால், பெத்லகேம் தொழில்நுட்பக் கல்லூரி, கருங்கல்.

    31 ஆம் தேதியில் திருவட்டாறு ஒன்றியம்-கூடைப்பந்து, தடகளம், கபடி, வாலிபால், எஸ்சல் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி, திருவட்டாறு. ராஜாக்கமங்கலம் ஒன்றியம் - கூடைப்பந்து, தடகளம், கபடி, வாலிபால், காமராஜ் பாலிடெக்னிக், பழவிளை.

    மாவட்ட அளவிலான நீச்சல் தேர்வுப் போட்டி நவம்பர் 4 ஆம் தேதி அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் நடைபெறும். 

    போட்டிகள் நடைபெறும் நாளில் காலை 8 மணிக்கு அந்தந்த இடங்களில் போட்டி நடத்துபவரிடம் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai