சுடச்சுட

    

    609 மையங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

    By DN  |   Published on : 27th October 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 609 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இம்முகாமில் ஏராளமான இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பெயர் சேர்க்க மனு அளித்தனர். மேலும், திருத்தம் செய்யவும் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

    இப்பணிகளை மேற்கொள்ள 37 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தலைமையில், சார் ஆட்சியர் சங்கர்லால் குமாவத், கோட்டாட்சியர் அருண்சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர் சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிக்குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுவினர் சிறப்பு முகாம்களில் நடைபெற்ற பணிகளை மேற்பார்வையிட்டனர்.

    நாகர்கோவிலில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி, இந்துக் கல்லூரி, வடலிவிளை அரசு தொடக்கப் பள்ளி, இருளப்பபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, சுசீந்திரம் மேல்நிலைப் பள்ளி, வழுக்கம்பாறை அரசு தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் சுஜிபிரேமலா உடன் சென்றார்.

    ஒழுகினசேரி அரசு பொது நூலகம், என்.எஸ்.கே. பள்ளி முகாம்களில் அதிமுக குமரி கிழக்கு மாவட்டச் செயலர் என். தளவாய் சுந்தரம், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் திருத்தப் பணிகளை பார்வையிட்டனர்.

    முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், ஈத்தாமொழி அரசு மேல்நிலைப் பள்ளி, சுண்டபற்றிவிளை அரசு உயர்நிலைப் பள்ளி, சூரன்குடி அரசு நடுநிலைப் பள்ளி முகாம்களை பார்வையிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai