சுடச்சுட

  

  நாகர்கோவில் மீனாட்சிபுரம் மற்றும் தெங்கம்புதூர் பகுதிகளில் இம்மாதம் 30 ஆம் தேதி மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  இதுகுறித்து நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீனாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் இம்மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ளன.

  இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 வரை வடிவீஸ்வரம், கோட்டாறு, ஒழுகினசேரி, தளியபுரம், கரியமாணிக்கபுரம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

  மேலும், தெங்கம்புதூர் துணை மின்நிலையத்திலும் அக்.30 ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப் பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai