சுடச்சுட

    

    குலசேகரம் அருகே பைக்கில் சென்று பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    வலியாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்தவர் கோபகுமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா (39) ஏற்றக்கோடு அருகேவுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் திங்கள்கிழமை மாலையில் வழக்கம் போல் பள்ளியிலிருந்து பைக்கில் வீடு திரும்பினார். மாலை 6 மணி அளவில் இவர் அண்டூர் புல்லை என்ற இடத்தில் வந்த போது பின்னால் மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர் ஸ்ரீஜாவின் பைக் மீது மோதி, அவரை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பிவிட்டார். இது குறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai