சுடச்சுட

    

    கருங்கல் அருகேயுள்ள பள்ளியாடியில் முழங்குழி அரசு ஆரம்ப சுகாதாரத் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    பள்ளியாடி எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமுக்கு பேரூராட்சித் தலைவி செல்வராணி தலைமை வகித்தார். காமன்வெல்த் நாடுகளின் மருத்துவ சங்க துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

    குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் முகாமை தொடங்கிவைத்துப் பேசினார். இதில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் மதுசூதனன் தலைமையில் சிறப்பு மருத்துவக் குழுவினர் 1083 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    பேரூராட்சி உறுப்பினர் குமார், துணைத் தலைவர் சசி உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai